وَيَحْلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُم مِّنكُمْ وَلَٰكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். (ஆனால்) அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும் அவர்கள் பயப்படுகிற மக்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும், அவர்கள் (உங்களை கண்டு) பயப்படுகின்ற மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்'' என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்ல. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்.