فَلَا تُعْجِبْكَ أَمْوَٰلُهُمْ وَلَآ أَوْلَٰدُهُمْ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَتَزْهَقَ أَنفُسُهُمْ وَهُمْ كَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் அவர்களை உலக வாழ்க்கையில் வேதனை செய்வதையும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான்.
Tamil Translation - Omar Sharifஆகவே, (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை தண்டிப்பதற்கும், இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவற்றை அவர்களுக்குக் கொடுத்து) அவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் நாடுகிறான்.