يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلْتُمْ إِلَى ٱلْأَرْضِ أَرَضِيتُم بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مِنَ ٱلْـَٔاخِرَةِ فَمَا مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا قَلِيلٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்? மறுமையைவிட உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தியடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதே தவிர வேறில்லை!
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை!
Tamil Translation - Abdulhamid Baqawi38. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!