يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ كَثِيرًا مِّنَ ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ يَكْنِزُونَ ٱلذَّهَبَ وَٱلْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِى سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்துவ அறிஞர்கள் இன்னும் துறவிகளில் இருந்து அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையைவிட்டு தடுக்கின்றனர். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்தவ அறிஞர்களில் இருந்தும் இன்னும் துறவிகளில் இருந்தும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு என்று நற்செய்தி கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi34. நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக.