caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 35

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:35

يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِى نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْنِزُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றின் மீது நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் நாளில், அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாக்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடிடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.”
Tamil Translation - Omar Sharifமறுமை நாளில், அவற்றை (-அந்த தங்கம் வெள்ளிகளை) நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும். ஆக, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளுக்கும், அவர்களுடைய விலாக்களுக்கும், அவர்களுடைய முதுகுகளுக்கும் சூடு போடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (-அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.” (என்று அவர்களுக்கு கூறப்படும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi35. (தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70