caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 28

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:28

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا۟ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَٰذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦٓ إِن شَآءَ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால் அல்லாஹ் நாடினால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (தேவையான செல்வத்தை உங்களுக்கு வழங்குவான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (உங்களுக்கு தேவையான செல்வத்தை வழங்குவான்) அல்லாஹ் நாடினால். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டுக்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்துவிடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக் கொண்டு உங்களை செல்வந்தர்களாக்கி விடுவான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70