caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 29

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:29

قَٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَٰغِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதம் கொடுக்கப்பட்டவர்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காதவர்களிடம் -அவர்கள் (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்க, உடனே ‘ஜிஸ்யா’ (வரி) கொடுக்கும் வரை- அவர்களிடம் போர் புரியுங்கள்.
Tamil Translation - Omar Sharifவேதம் கொடுக்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமல் இருக்கிறார்களோ அவர்களிடம் - அவர்களோ (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில், உடனே வரியை கொடுக்கும் வரை - நீங்கள் போர் புரியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடையாகக் கருதாமல், மேலும், இந்த சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றனரோ அவர்கள், (தங்கள்) கையால் பணிவுடன் ‘ஜிஸ்யா' (என்னும் கப்பம்) கட்டும் வரை நீங்கள் அவர்களிடம் போர் புரியுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70