ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْفَآئِزُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். இவர்கள்தான் வெற்றியாளர்கள்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும், இவர்கள்தான் (சொர்க்கத்தைக் கொண்டு) வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள்.