ٱلتَّٰٓئِبُونَ ٱلْعَٰبِدُونَ ٱلْحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلْـَٔامِرُونَ بِٱلْمَعْرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلْمُنكَرِ وَٱلْحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; (அல்லாஹ்வை) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; பாவத்தை விட்டுத் தடுக்கக்கூடியவர்கள்; அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். (இத்தகைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(சொர்க்க பாக்கியம் பெறுகின்ற அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; அல்லாஹ்வை புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில் பணிவாக அல்லாஹ்விற்கு முன்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; இன்னும், பாவத்தை விட்டுத் தடுக்கக் கூடியவர்கள்; இன்னும், அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தகைய தன்மைகளை உடைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi112. பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக.