caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 111

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:111

إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَ يُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ وَٱلْقُرْءَانِ وَمَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ مِنَ ٱللَّهِ فَٱسْتَبْشِرُوا۟ بِبَيْعِكُمُ ٱلَّذِى بَايَعْتُم بِهِۦ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள்; (எதிரிகளை) கொல்வார்கள்; (அவர்களிலும் சிலர்) கொல்லப்படுவார்கள். தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் தன் மீது கடமையான வாக்குறுதியாக (அல்லாஹ் இதை வாக்களித்துள்ளான்). அல்லாஹ்வைவிட தன் வாக்கை அதிகம் நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, அதற்குப் பகரமாக நீங்கள் விற்றுக்கொண்ட விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சியுறுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; ஆக, அவர்கள் (எதிரிகளை) கொல்வார்கள்; இன்னும் (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் மீது கடமையான வாக்குறுதியாக இது இருக்கிறது. இன்னும், அல்லாஹ்வைவிட தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, எதற்குப் பகரமாக நீங்கள் (உங்களை) விற்றீர்களோ அந்த உங்கள் விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!
Tamil Translation - Abdulhamid Baqawi111. அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70