caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 109

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:109

أَفَمَنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ تَقْوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضْوَٰنٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَٱنْهَارَ بِهِۦ فِى نَارِ جَهَنَّمَ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தான் கட்டுவதை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது தான் கட்டுவதை சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் அடித்தளமிட்டு, அது அவனுடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தமது கட்டிடத்தை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது, சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் தமது கட்டிடத்திற்கு அடித்தளமிட்டு, அது அவருடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi109. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70