أَلَمْ يَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ هُوَ يَقْبَلُ ٱلتَّوْبَةَ عَنْ عِبَادِهِۦ وَيَأْخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, அல்லாஹ்தான் தன் அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்துவதை (பிழை பொறுப்பை) ஏற்கிறான்; தர்மங்களை எடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின் தவ்பாவை) மகா அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை (-அவர்கள் திருந்துவதையும் மன்னிப்புக் கோருவதையும்) ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், தர்மங்களை எடுக்கிறான்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi104. நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கிறான் என்பதையும், தர்மங்களை அவனே எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கருணை காட்டுபவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?