وَقُلِ ٱعْمَلُوا۟ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ وَٱلْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: “(நீங்கள் செய்வதை) செய்யுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்க்கிறார்கள். மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் திருப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) இன்னும், (போருக்கு வராமல் பின்தங்கிவிட்டு, பிறகு மன்னிப்பு கோரியவர்களிடம்) கூறுவீராக: “நீங்கள் (நல்ல அமல்களை அதிகம்) செய்யுங்கள். ஆக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். இன்னும், மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுமையில்) மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi105. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.