وَءَاخَرُونَ ٱعْتَرَفُوا۟ بِذُنُوبِهِمْ خَلَطُوا۟ عَمَلًا صَٰلِحًا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமற்றவர்கள் சிலர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். நல்ல செயலையும் மற்ற கெட்டதையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன்,பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத) மற்றவர்கள் சிலரும் (மதீனாவிலும் அதைச் சுற்றிலும்) இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். நல்ல செயலையும் மற்ற (சில) கெட்ட செயலையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi102. வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தையும் மற்ற (சில) கெட்ட(காரியத்)தையும் கலந்து செய்துவிட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கருணையாளன் ஆவான்.