caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 66

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:66

ٱلْـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்போது அல்லாஹ் உங்களுக்கு (சட்டத்தை) இலகுவாக்கினான். நிச்சயமாக உங்களில் பலவீனம் உள்ளது என்பதை அறிந்தான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் (மற்ற) இருநூறு நபர்களை வெல்வார்கள். (இத்தகைய) ஆயிரம் நபர்கள் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் நபர்களை வெல்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇப்போது அல்லாஹ் உங்களுக்கு (சட்டத்தை) இலகுவாக்கினான். இன்னும், நிச்சயமாக உங்களில் பலவீனம் உள்ளது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆக, உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு நபர்களை அவர்கள் வெல்வார்கள். இன்னும், (இத்தகைய) ஆயிரம் நபர்கள் உங்களில் இருந்தால், அல்லாஹ்வின் அனுமதியினால் (எதிரிகளில்) இரண்டாயிரம் நபர்களை அவர்கள் வெல்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi66. எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70