caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 65

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:65

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ يَغْلِبُوٓا۟ أَلْفًا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆகும்.
Tamil Translation - Omar Sharifநபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் (அவர்கள் உங்கள் எதிரிகளில்) இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70