مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(கலகம் செய்கின்ற எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதிகளாக்குவது ஒரு நபிக்கு ஆகுமானதல்ல. (நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ் (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharif(பத்ர் போரில் கைது செய்யப்பட்ட எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்காமல், அவர்களை கைதிகளாக்குவது (பின்னர், பிணைத் தொகை வாங்கி விடுவிப்பது) நபிக்கு ஆகுமானதல்ல. (நபியின் தோழர்களே! நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. (இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.