caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 48

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:48

وَإِذْ زَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَٰنُ أَعْمَٰلَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلْيَوْمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّى جَارٌ لَّكُمْ فَلَمَّا تَرَآءَتِ ٱلْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّى بَرِىٓءٌ مِّنكُمْ إِنِّىٓ أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; உங்களுக்கு நிச்சயமாக நானும் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இரு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பினான்; “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; இன்னும், உங்களுக்கு நிச்சயமாக நான் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, இரு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பி (ஓடி)னான். இன்னும், “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன் ஆவேன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; இன்னும், அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து ‘‘எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன்'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்குநேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று ‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70