caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 41

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:41

وَٱعْلَمُوٓا۟ أَنَّمَا غَنِمْتُم مِّن شَىْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ إِن كُنتُمْ ءَامَنتُم بِٱللَّهِ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ ٱلْفُرْقَانِ يَوْمَ ٱلْتَقَى ٱلْجَمْعَانِ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவித்த நாளில், இரு கூட்டமும் சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்... நிச்சயமாக நீங்கள் வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியது. அல்லாஹ் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharif“நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால், இன்னும், (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவிக்கப்பட்ட நாளில்; (நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய) இரு படைகள் (போரில்) சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதை நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நிச்சயமாக நீங்கள் (போரில்) வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்விற்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi41. (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70