وَإِذْ قَالُوا۟ ٱللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ ٱلْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்நிராகரிப்பவர்கள்) “அல்லாஹ்வே! இதுதான் உன்னிடமிருந்து உண்மையாக இருக்குமேயானால் எங்கள் மீது வானத்திலிருந்து கல்லை (மழையாகப்) பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களிடம் கொண்டு வா!” என்று அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே! அந்நிராகரிப்பவர்கள்) “அல்லாஹ்வே! இதுதான் உன்னிடமிருந்து (இறக்கப்பட்ட) உண்மையா(ன வேதமா)க இருக்குமேயானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழை பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) தண்டனையை எங்களிடம் கொண்டு வா!” என்று அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi32. மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக.