وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பூமியில் குறைவானவர்களாக, பலவீனர்களாக, உங்களை மக்கள் தாக்கி (சிதறடித்து) விடுவதை பயந்தவர்களாக இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களுக்கு இடமளித்தான். தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் பூமியில் குறைவானவர்களாக, பலவீனர்களாக இருந்தபோது உங்களை மக்கள் தாக்கி (சிதறடித்து) விடுவதை பயந்தவர்களாக இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களுக்கு ஒதுங்க இடமளித்தான்; இன்னும், தன் உதவியினால் உங்களைப் பலப்படுத்தினான்; இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!