caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 17

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:17

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ وَلِيُبْلِىَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; என்றாலும் அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். (நபியே! எதிரிகள் மீது நீர் மண்ணை) எறிந்தபோது நீர் எறியவில்லை; என்றாலும் நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் நம்பிக்கையாளர்களை அழகிய சோதனையாக அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன் நன்றிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, (நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. என்றாலும். அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். இன்னும், (நபியே! எதிரிகள் மீது நீர் மண்ணை) எறிந்தபோது நீர் எறியவில்லை. என்றாலும், நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் நம்பிக்கையாளர்களை அழகிய சோதனையாக அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன் நன்றிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70