caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 16

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:16

وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ وَبِئْسَ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசண்டையிடுவதற்கு ஒதுங்கக்கூடியவராக, அல்லது (தனது) ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தில் சார்ந்துவிட்டார். அவருடைய தங்குமிடம் நரகம்; அது மீளுமிடத்தால் கெட்டு விட்டது.
Tamil Translation - Omar Sharifசண்டையிடுவதற்கு ஒதுங்கக் கூடியவராக, அல்லது (தனது) கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (-புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்து கொண்டார். இன்னும், அவருடைய தங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. (எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70