caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 1

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: ‘வெற்றிப் பொருள்கள்’ அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் சொந்தமானவை. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: வெற்றிப் பொருள்கள், - அல்லாஹ்விற்கும், தூதருக்கும் சொந்தமானவை ஆகும். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; இன்னும், நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் (எல்லாக் காரியங்களிலும்) அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70