وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَٰعِدَ لِلسَّمْعِ فَمَن يَسْتَمِعِ ٱلْـَٔانَ يَجِدْ لَهُۥ شِهَابًا رَّصَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்கள் அதில் (-வானத்தில்) பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவர் தனக்கு (தன்னை எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக நாங்கள் அ(ந்த வானத்)தில் பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். ஆக, இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவரை (எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக்கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவற்றைச்) செவியுற எவனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான்.