caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:94

وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍ مِّن نَّبِىٍّ إِلَّآ أَخَذْنَآ أَهْلَهَا بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் அனுப்பவில்லை அதில் வசிப்பவர்கள் பணி(ந்து நம்மிடம் வரு)வதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் அவர்களை நாம் பிடித்தே தவிர.
Tamil Translation - Omar Sharifநாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் (வசிக்கும் மக்களுக்கு) அனுப்பவில்லை, - அதில் வசிப்பவர்கள் (அந்த தூதரை நிராகரித்தால் அவர்கள்) பணி(ந்து, திருந்தி நம்மிடம் வரு)வதற்காக வறுமையினாலும், நோயினாலும் அவர்களை நாம் பிடித்தே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi94. நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70