فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَٰلَٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍ كَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். “என் சமுதாயமே! என் இறைவனின் தூது (செய்தி)களை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு துயர்கொள்வேன்” என்று (ஷுஐப்) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். இன்னும் கூறினார்: “என் சமுதாயமே! என் இறைவனின் தூது செய்திகளை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு நான் துக்கப்படுவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi93. (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.