ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فَٱلْيَوْمَ نَنسَىٰهُمْ كَمَا نَسُوا۟ لِقَآءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிராகரிப்பவர்கள்) தங்கள் மார்க்கத்தை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்களை உலக வாழ்க்கை மயக்கியது. அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று அவர்களை (நாமும்) மறப்போம் (நரகத்தில் அவர்களை விட்டுவிடுவோம்).
Tamil Translation - Omar Sharif(நிராகரித்த) அவர்கள் தங்கள் மார்க்கத்தை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். இன்னும், அவர்களை உலக வாழ்க்கை மயக்கியது. அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று அவர்களை (நாமும்) மறந்துவிடுவோம். (-அவர்களின் அழைப்பை ஏற்காமல் நரகத்தில் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்)
Tamil Translation - Abdulhamid Baqawi51. இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்கள் மார்க்கத்தை வேடிக்கை யாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.