caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:27

يَٰبَنِىٓ ءَادَمَ لَا يَفْتِنَنَّكُمُ ٱلشَّيْطَٰنُ كَمَآ أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ ٱلْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءَٰتِهِمَآ إِنَّهُۥ يَرَىٰكُمْ هُوَ وَقَبِيلُهُۥ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை, அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவன் அவ்விருவரை விட்டு அவ்விருவரின் ஆடையை கழட்டியவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (ஏமாற்றி)யது போன்று உங்களை ஏமாற்றி விடவேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு உங்களைப் பார்க்கிறான். நிச்சயமாக நாம் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை, அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவன் அவ்விருவரை விட்டு அவ்விருவரின் ஆடையை கழட்டியவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (ஏமாற்றி)யது போன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய அழகிய வார்த்தைகள் கூறி) உங்களை ஏமாற்றி விடவேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு உங்களைப் பார்க்கிறார்கள். நிச்சயமாக நாம், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிவிட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70