caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:28

وَإِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால், “எங்கள் மூதாதைகளை இதன் மீது (நாங்கள்) கண்டோம். இதை அல்லாஹ்வும் எங்களுக்கு ஏவினான்” என்று கூறுகின்றனர். “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானதை ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை கூறுகிறீர்களா?” என்று (நபியே!) கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால், “எங்கள் மூதாதைகளை இதில்தான் (நாங்கள்) கண்டோம். இதை அல்லாஹ்வும் எங்களுக்கு ஏவினான்” என்று கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானதை ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை கூறுகிறீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi28. (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70