caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:22

فَدَلَّىٰهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا ٱلشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ ٱلْجَنَّةِ وَنَادَىٰهُمَا رَبُّهُمَآ أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا ٱلشَّجَرَةِ وَأَقُل لَّكُمَآ إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, ஏமாற்றி அவ்விருவரையும் தரம் தாழ்த்தினான் (ஷைத்தான்). (அந்த) இருவரும் (அம்)மரத்தைச் சுவைத்தபோது, அவ்விருவரின் வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளினால் தம் இருவர் மீதும் மூடிக்கொள்ள அவ்விருவரும் முயன்றனர். அவ்விருவரின் இறைவன் “அம்மரத்தை விட்டு நான் உங்களிருவரையும் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் வெளிப்படையான எதிரி என்று நான் உங்களிருவருக்கும் கூறவில்லையா?” என்று (கூறி) அவ்விருவரையும் அழைத்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் இருவரையும் ஏமாற்றி தரம் தாழ்த்தினான் (ஷைத்தான்). ஆக, (அந்த) இருவரும் (அம்)மரத்தைச் சுவைத்தபோது, அவர்கள் இருவரின் வெட்கத்தலங்கள் அவர்கள் இருவருக்கும் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளினால் தம் இருவர் மீதும் மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர். அவர்கள் இருவரின் இறைவன், “அம்மரத்தை விட்டு நான் உங்கள் இருவரையும் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்கள் இருவருக்கும் வெளிப்படையான எதிரி என்று நான் உங்கள் இருவருக்கும் கூறவில்லையா?” என்று (கூறி) அவர்கள் இருவரையும் அழைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன் ‘‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70