وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இது உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது நேர்வழியும், (அல்லாஹ்வின்) கருணையுமாகும்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் (உம் இறைவனிடம் கேட்டு) தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இவை, உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது (அல்லாஹ்வின்) நேர்வழியும், கருணையுமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi203. (அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.