caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 198

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:198

وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَسْمَعُوا۟ وَتَرَىٰهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (சிலை வணங்கிகளே!) நீங்கள் (வணங்குகிற) அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் (உங்கள் அழைப்பை) செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் (-அந்த சிலைகள்) உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். ஆனால், அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi198. நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70