وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனையன்றி நீங்கள் எவர்களிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய இயலமாட்டார்கள்; இன்னும் தங்களுக்கும் உதவிக்கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனையன்றி நீங்கள் எவர்களிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய இயலமாட்டார்கள்; இன்னும், தங்களுக்கு தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi197. ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.