أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள், பூமியின் பேராட்சியிலும் அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? இதற்குப் பின்னர் (எச்சரிக்கை நிறைந்த) எந்த செய்தியை அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானங்கள், பூமியின் பேராட்சியிலும், அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும், அவர்களுடைய (மரணத்தின்) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? (எச்சரிக்கை நிறைந்த வேறு) எந்த செய்தியைத்தான் அவர்கள் இதற்குப் பின்னர் நம்பிக்கை கொள்வார்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi185. வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.