وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَٰٓئِهِۦ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுக்கே மிக அழகிய பெயர்கள் உண்டு. ஆகவே, அவற்றைக் கொண்டு அவனை அழையுங்கள். அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi180. அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்.