وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَآ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்காக படைத்து விட்டோம். அவர்களுக்கு உள்ளங்கள் உண்டு, அவற்றைக் கொண்டு சிந்தித்து விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றைக்கொண்டு பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றைக்கொண்டு செவிசாய்க்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்று. மாறாக அவர்கள் (அவற்றைவிட) அதிகம் வழிகெட்டவர்கள். அவர்கள்தான் கவனமற்றவர்கள் (அலட்சியக்காரர்கள்).
Tamil Translation - Omar Sharifமனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்காக படைத்து விட்டோம். அவர்களுக்கு உள்ளங்கள் உண்டு, அவற்றின் மூலம் சிந்தித்து விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றின் மூலம் செவிகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக, அவர்கள் (அவற்றைவிட) அதிகம் வழிகெட்டவர்கள். அவர்கள்தான் (என் அத்தாட்சிகளை மறந்த) கவனமற்றவர்கள் ஆவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi179. நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்.