caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 148

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:148

وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை -அதற்கு மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை - (தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு (நேரான) பாதையை வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை - மாட்டின் சப்தம் அதற்கு இருந்த ஓர் உடலை - (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். “நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; இன்னும், அவர்களுக்கு (நேரான) பாதையை அது வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) உறுதியாக எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi148. (தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70