وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةً وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும் அதை பத்து இரவுகளைக் கொண்டு முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! சீர்திருத்து! விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும், அதை பத்து இரவுகளைக் கொண்டு (நாற்பது இரவுகளாக) முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! இன்னும், (அவர்களை) சீர்திருத்து! இன்னும், விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”
Tamil Translation - Abdulhamid Baqawi142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்.