caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 141

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:141

وَإِذْ أَنجَيْنَٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களை கொடிய வேதனையால் உங்களைத் துன்புறுத்திய ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து உங்களை காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்கள் மகன்களைக் கொன்று குவிப்பார்கள். உங்கள் பெண்(பிள்ளை)களை வாழவிடுவார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரிய சோதனை உண்டு.
Tamil Translation - Omar Sharif(இஸ்ரவேலர்களே!) கொடிய தண்டனையால் உங்க(ள் மூதாதைக)ளைத் துன்புறுத்திய ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து உங்க(ள் மூதாதைக)ளைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்கள் மகன்களைக் கொன்று குவிப்பார்கள். இன்னும், உங்கள் பெண்(பிள்ளை)களை வாழவிடுவார்கள். இன்னும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரிய சோதனை இருந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi141. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70