قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍ وَخَلَقْتَهُۥ مِن طِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து) தடுத்தது எது?” என்று கூறினான் (இறைவன்). (அதற்கு இப்லீஸ்) “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “நான் உனக்குக் கட்டளையிட்டபோது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து உன்னைத்) தடுத்தது எது?” (இப்லீஸ்) கூறினான்: “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi12. (ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்.