وَلَقَدْ خَلَقْنَٰكُمْ ثُمَّ صَوَّرْنَٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக உங்களைப் படைத்தோம். பிறகு, உங்களை வடிவமைத்தோம். பிறகு, “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தனர். சிரம் பணிந்தவர்களில் அவன் ஆகவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், திட்டவட்டமாக உங்களைப் படைத்தோம். பிறகு, உங்களை வடிவமைத்தோம். பிறகு, “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்குக் கூறினோம். ஆக, அவர்கள் சிரம் பணிந்தனர், இப்லீஸைத் தவிர. அவன், சிரம் பணிந்தவர்களில் ஆகவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi11. நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.