caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை (-நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை) உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகின்ற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட) அ(ந்த சம்பவத்)தை உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகிற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).
Tamil Translation - Abdulhamid Baqawi12. அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70