caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taghaabun அத்தியாயம், வசனம் 9

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 108 · 64:9

يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ ٱلْجَمْعِ ذَٰلِكَ يَوْمُ ٱلتَّغَابُنِ وَمَن يُؤْمِنۢ بِٱللَّهِ وَيَعْمَلْ صَٰلِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدْخِلْهُ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். அவர்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharifஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் (சிலைகளை வணங்கிய மக்களும் இஸ்லாமை நிராகரித்த மக்களும்) ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். இன்னும், அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான (பாக்கியமிக்க) வெற்றியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்திவிடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70