وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهْتَدُوا۟ بِهَا فِى ظُلُمَٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் தரை இன்னும் கடலின் இருள்களில் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான். அறிகின்ற ஒரு சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை விவரித்து விட்டோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான், நீங்கள் தரையிலும் கடலின் இருள்களிலும் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக. அறிவுள்ள சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக நாம் விவரித்து விட்டோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்.