ثُمَّ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِىٓ أَحْسَنَ وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாகவும், கருணையாகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காக.
Tamil Translation - Omar Sharifபிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாக, கருணையாக அமைவதற்காகவும் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்(து அதன் மூலம் அவருடைய சமுதாய மக்களை உபதேசித்)தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi154. (தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).