وَكَذَٰلِكَ جَعَلْنَا فِى كُلِّ قَرْيَةٍ أَكَٰبِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا۟ فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறே எல்லா ஊர்களிலும் அதிலுள்ள பெரிய பாவிகளை அவற்றில் சதி செய்வதற்காக ஏற்படுத்தினோம். தங்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) அவர்கள் சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இவ்வாறே எல்லா ஊரிலும் தலைவர்களாக அதிலுள்ள பெரிய பாவிகளை ஆக்கினோம், அவற்றில் அவர்கள் சதி செய்வதற்காக. அவர்கள் தங்களுக்குத் தாமே தவிர (மற்றவர்களுக்கு) சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi123. இவ்வாறே, ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கிறோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கே தவிர, (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.