caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:12

قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ قُل لِّلَّهِ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” எனக் கூறுவீராக. (நபியே நீர்) கூறுவீராக: (அவை) “அல்லாஹ்வுக்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. தங்களையே நஷ்டப்படுத்தியவர்கள், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” (நபியே நீர்) கூறுவீராக: “(அவை) அல்லாஹ்விற்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70