فَكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ إِن كُنتُم بِـَٔايَٰتِهِۦ مُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நீங்கள் அவனு (அல்லாஹ்வு)டைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஆகவே, (அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள், நீங்கள் அவனுடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்.