caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 119

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:119

وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا ٱضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَّيُضِلُّونَ بِأَهْوَآئِهِم بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِٱلْمُعْتَدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அறுக்கும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்களுக்கு தடுத்தவற்றை உங்களுக்கு விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது அது ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வியின்றி தங்கள் ஆசைகளைக் கொண்டு (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் வரம்பு மீறிகளை மிக அறிபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (அறுக்கும்போது) எதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதோ அதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்கள் மீது தடுத்தவற்றை உங்களுக்கு (இந்த வேதத்தில் :, : ஆகிய வசனங்களில்) விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது, அதை உண்ணுவது உங்கள் நிர்ப்பந்தத்தின் அளவு உங்களுக்கு ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வி அறிவின்றி தங்கள் ஆசைகளினால் (மக்களை) வழி கெடுக்கிறார்கள். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் எல்லை மீறுபவர்களை மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi119. (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70